உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில், கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிலையக் கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தை முதலமைச்சர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இணைச் செயலாளர் வே. குணசீலன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் "தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனுக்கு எதிராகப் போடப்பட்ட பேருந்து நிலையக் கட்டிடத் திட்டத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் வர்த்தகப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
முறைகேடுகளுடன் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கட்டிடத்தை தற்போது இடித்துவிட்டு மீண்டும் புதிதாகக் கட்டுவது அரசு நிதி வீணாக வழிவகுக்கும். எனவே, பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, உடன்குடி பேருந்து நிலையக் கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்காத வகையில் தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

